வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

>> Tuesday, December 05, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலைப்பு: உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?

கட்டுரை A4 அளவிலான தாளில் 5 முதல் 8 பக்கங்கள் வரை இருக்கலாம்.

போட்டியில் பங்கேற்போர் ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், விலாசம், பிறந்த தேதி, ஆணா-பெண்ணா, படிக்கும்/படித்த துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மார்ச் 31, 2007

வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் தேதி : ஏப்ரல் 14, 2007 (தமிழ்ப் புத்தாண்டு)

பரிசுகள்:
முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: தலா ரூ2,000 (20 பேருக்கு)

அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
No. 67 - 5th Lane,
Chennai-600 039
தொலைபேசி இலக்கம்: 044-45561101

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

0 comments:

counter