பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆல் பாஸ்

>> Wednesday, June 10, 2020


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! மாணவர்களுக்கு குட் நியூஸ். .ஆல் பாஸ் .. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. :



தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 15ந்தேதி தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளீயானது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்றும் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். நிலுலையில் உள்ள 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.. எஞ்சியுள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு மற்றூம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண்ணும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்ணும் வழங்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



Read more...

எண்ணங்களின் வலிமை..!!

>> Tuesday, June 02, 2020


எண்ணங்களின் வலிமை..!!

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.

வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.

அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்றார் .

இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.

வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்றபடியே அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?

இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

"எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்"

Note: படித்ததில் பிடித்தது.

Read more...

Joke

>> Monday, June 01, 2020


Read more...
counter