கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 01

>> Friday, December 08, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

பொதுவாகவே இப்படி ஏதாவது கட்டுரைப்போட்டி என்றால்... நாமெல்லாம் என்ன செய்வோம்... நம்ம அண்ணன்மார்களிடமோ, அக்காக்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ, கெஞ்சி கூத்தாடி, அந்த தலைப்பில் எழுதி தரச்சொல்லி, அதை வாங்கி மனப்பாடம் செய்து எழுதுவோம்...

சிலர் காலேஜில் படிப்பவர்களிடம் இருக்கும் கட்டுரைகள் என்ற புத்தகங்களில் இருந்து முழுசாக உருகிக்கொள்ளுவார்கள்...

கொடுமை என்னவென்றால் சிலர் "பிட்" கூட அடிப்பார்கள், இன்னும் சிலரோ "ஈ" அடிச்சான் காப்பி அடிப்பார்கள்.....

ஆனால் வெகு சிலர் மட்டும் புத்தகங்கள், பத்திரிக்கைகளை படித்தும், தொலைக்காட்சியை பார்த்தும், வானொலியில் கேட்டும், புரபஷர்கள், ஆசிரியர்கள், நாலும் தெரிந்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள் இப்படி சிலரிடம் விவாதித்தோ... கிடைத்த சில பாயிண்டகளை வைத்துக்கொண்டு சொந்தமாக, சிந்தித்து எழுதி வெற்றி பெறுவார்கள்.....

அடுத்தவர்களின் கருத்துக்கள் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் அதை பின்பற்றாமல், தங்களின் சொந்த நடையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்...

************

நண்பர் லக்கி லுக்குடன் பேசிக்கொன்டிருக்கும் போது..... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றம்/அவை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாது குறித்து சில வித்தியாசமான கருத்தை சொன்னார்.... என்னை சிந்திக்க வைத்த சில கருத்துக்கள்....

1. வெறுமனே சட்ட சபைக்கு போய் பாக்கு மென்று விட்டு வந்தால் எந்த பிரயோசனமும் இல்லை.

2. ஒரு சிறந்த எம்.எல்.ஏ. மக்களோடு பழகி அவர்களது பிரச்சினைகளை அறிந்தால் மட்டுமே அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியும். இதற்காக சட்டமன்றத்துக்கு சென்று வாதம் புரிய தான் வேண்டும் என்பதில்லை.

3. நான் சட்டமன்றத்துக்கு போவது தவறென்றோ, போகாதது நல்லதென்றோ சொல்லவில்லை. சட்டமன்றத்துக்கு போகாதது பெரிய குற்றமெல்லாம் இல்லை என்றே சொல்லவருகிறேன்.

4. வாரத்துக்கு ஒரு முறை எம்.எல்.ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்கள் வாங்க வேண்டும். தொகுதியில் சிறு சிறு பிரச்சினைகளோ அல்லது ஏதேனும் பெரிய விபத்துக்களோ ஏற்பட்டால் ஸ்பாட்டுக்கு உடனே செல்ல வேண்டும். அதிகாரிகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். தன் தொகுதியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

5. சட்டசபைக்குப் போகவில்லையென்றால் கவனஈர்ப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்னை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கல், கேள்வி/பதில் --- இவற்றில் பங்கேற்பது/பதிலளிப்பது இல்லமல் போய்விடும். மேலும் பங்களிப்பு முற்றிலும் இருக்காது.

************

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

0 comments:

counter