சார்பட்டா - திரைவிமர்சனம்
>> Saturday, July 24, 2021
சார்பட்டா - திரைவிமர்சனம்
ஒரு குத்துச்சண்டை களம்!
அதில் யாரோ ஒருவராக சார்பட்டா பரம்பரைக்கு அபிமானியாக வெளியே நிற்கும் ஆர்யா எப்படி முக்கிய வீரராக மாறி எதிரியை வீழ்த்துகிறார் என்பதே கதை!
யாருய்யா அந்த ரோஸ்? வொண்டர்ஃபுல் பார்ட் ரோசுடையது!
ஆர்யா : என்னே உடற்கட்டு!
அங்கங்கே வீக்கமோ என நாம் திகைக்கும் அளவுக்கு உடலை பார்ட் பார்ட்டாக கட்டுமஸ்த்தாக்கியுள்ளார் ஆர்யா! உடலெங்கும் அத்தனை கட்டிங்க்ஸ்!
அவருக்கு இது நிச்சயமாக ஒரு வெறித்தனமான கம்பேக் மூவி!
நடிப்பிலும், சண்டைகளிலும் அத்தனை ஆக்ரோஷம்!
பசுபதி : ஒரு தேர்ந்த நடிகர்!
"கழக உடன்பிறப்பு நான், யாருக்கும் பயப்பட மாட்டேன்"னு சொல்லும்போது இங்கே நமக்கு சிலிர்க்கிறது.
ஆர்யா வெல்லும்போதும் தோற்கும்போதும், சோகத்தின்போதும் உற்சாகத்தின்போதும் முகத்தில் உணர்ச்சி ரேகைகளை மாற்றிமாற்றி ஓடவைத்து சாகசம் நிகழ்த்துகிறார் பசுபதி.
ஜான் விஜய்: இந்த படத்தில் இவரது இடத்தை இன்னொரு நடிகர் பூர்த்திசெய்ய வாய்ப்பேயில்லை.
பெரிய பிரச்சனை நடந்துகொண்டிருக்கும்போது, அப்பிரச்சனையை முற்றிலும் வேறுகோணத்தில் யோசித்துக் கொண்டிருக்கும் ஜான், மெள்ள ஆர்யாவின் அருகில் வந்து,
"யு ஃபௌண்ட் யுவர் ஓன் பாத், உன் வழியை நீ கண்டுபிடிச்சிட்டே மேன்! இனி அப்படியே திரும்பிப்பார்க்காம போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்!" என சொல்வது ரசிக்கவைத்த காட்சியமைப்பு!
வெற்றி,
ராம்,
ரோஸ்,
வேம்புலி,
ராமின் மாமன் தணிகை,
ஆர்யாவின் மாமன் மகள் மாரியம்மா,
போட்டி நடத்தும் கோணி சந்திரன்,
வர்ணனை செய்யும் தங்கம்,
ரங்கனின் வைரி துரைக்கண்ணு,
அத்தனையும் சிறப்பான தேர்வு!
இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஆர்ட் அருமை!
சார்பட்டா!
மக்களின் மனதில் இடம்பிடிக்கப்போகும் நிச்சய ஹிட்!
0 comments:
Post a Comment