புத்திசாலித்தனம்

>> Wednesday, May 27, 2020




ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.

நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.

எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை

Read more...

Man Made Rules, Will Corona Obey ... ???

>> Tuesday, May 26, 2020


Corona Possibility 😊 :

1. Only 20 persons in a bus. 21st will bring corona.

2. After 7 pm, corona takes walk till 7am. Don't venture out.

3. If you carry liquor from shop, corona won't mind. But it will catch you, if you sit in bar and drink.

4. If you travel with pass, you won't get it. But won't leave you if you travel without pass.

5. You won't get it, if you buy from vendor or shops. But won't leave you if you try the same at Mall or markets.

6. It won't touch politicians and their crony, without mask. But if it happens to see a common man without mask, it will run to embrace him.

7. Sunday don't venture out. It is on holiday run. You won't catch it on week days.

8. It will be waiting in temples, mosque and churches. But will never enter saloons and beauty parlour.

9. You will have it if you dine in hotels. But no problem if you sit there waiting to carry food.

10. It is not invited in rich marriages with N number of guests. But in poor man's marriage, it accompanies 51st man.

What a big joke
So be careful ...


Laugh &
Stay Safe .. Stay Blessed 🙏

Note: Forwarded message. Just for Laugh

Read more...

பாட்டி வைத்தியம்

>> Sunday, May 24, 2020




1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

Read more...

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?

>> Thursday, May 21, 2020


தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...



பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.

தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

Read more...

வடமாநில தொழிலாளர்கள் Vs தமிழர்கள்

>> Monday, May 18, 2020


உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் - தமிழகம் (வேதனை பதிவு) #வடமாநில_தொழிலாளர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள்...

இதுதான் சரியான சமயம்.. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்....

தமிழக தொழில்துறையின் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி, தொழில் துறையை தமிழர்கள் கைவசப்படுத்த வேண்டும்...

என்பதாய் ஒரு அன்பர் வெளியிட்டிருந்த காணொளி பதிவை காண நேர்ந்தது....

மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அந்த பதிவு...

ஆட்கள் பற்றாக்குறையாலோ, வெகு திறமையானவர்கள் என்பதாலோ வட இந்திய தொழிலாளர்களை தமிழகம் சுவீகரித்துக்கொள்ளவில்லை....

தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க தயாரில்லை. வடஇந்திய தொழிலாளர்கள் வாங்கும் கூலியை போல இருமடங்கு கூலி வேண்டும்...

ஆனால்... வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் நழுவ முடியுமோ அப்படி நழுவி நேரம் கடத்த வேண்டும்....

தினக்கூலிக்கு வேலைக்கு கூப்பிட்டால் ஒருநாள் வேலையை மூன்றுநாளுக்கு இழுக்க வேண்டும்..

அதுவே இரண்டு ஆள் செய்து முடித்துவிட கூடிய வேலைக்கு ஐந்து ஆள் கூலி பேசி, மூன்று பேராக வந்து அரைநாளிலேயே வேலையை முடித்து விடலாம்.. என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்....

தனியாரிடம் வேலைக்கு போனால் உழைத்தே ஆகவேண்டும்.. அதைவிட ஏரிக்கரையிலேயோ , புளியமரத்தடியிலேயோ உட்கார்ந்தோ/படுத்தோ கதை பேசி நேரம் கடத்தும் 100 நாள் வேலைக்கு போனால் போதும்.... என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்...

அட்வான்ஸாக காசு வாங்கிக்கொண்டோ, ஏதாவது சாமான் வாங்கணும் என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டோ கட்டிங் போட்டு மட்டையாகி, வேலை கொடுப்பவரை அலைய விடும் உழைக்க தயாரில்லாத கொத்தனார்கள், ஆசாரிகள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள் ஒரு பக்கம்...

எல்லாவிதத்திலும் #நேர்மையையும் , #ஒழுக்கத்தையும் #தொலைத்துவிட்ட #தமிழக #தொழிலாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களில்தான் வடமாநில தொழிலாளர்கள் தங்களை பொருத்திக்கொண்டார்கள்....

அவர்கள் என்னவோ தமிழக வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாய் எப்படி நாக்கூசாமல் சொல்ல முடிகிறது??

உங்களிடம் இருந்து அவர்கள் பிடுங்கவில்லை.... நீங்கள் இலவசங்கள் பின்னால் ஓடுவதற்காகவும், கட்டிங்அடித்து மட்டையாகவும், சம்பாதிக்கவும் தடை என்று நினைத்து தூக்கி வீசிய "உழைப்பை" அவர்கள் துடைத்து எடுத்து தன்வயமாக்கி கொண்டார்கள்...

Note : Forwarded Message. Thanks to the Unknown Writer.

Read more...

நான் ஆரவல்லி சூரவல்லி ஆட வந்த சாதிமல்லி - Velainu Vandhutta Vellaikaaran Song

>> Saturday, May 16, 2020

நான் ஆரவல்லி சூரவல்லி ஆட வந்த சாதிமல்லி - Lyrics


குழு : தன்னா னானே
னானா னானே தன்னா
னானே னானா னானே
தன்னா னானே னானா
னானே தானா னா

பெண் : நான் ஆரவல்லி
சூரவல்லி ஆட வந்த
சாதிமல்லி என்ன விட்டு
எட்டி நீயும் போகாத

குழு : தன்னா னானே
னானா னானே தன்னா
னானே னானா னானே
தன்னா னானே னானா
னானே தானா னா

பெண் : நான் வாசமல்லி
பூசமல்லி வாடிடாத
செண்டுமல்லி உத்து
உத்து என்னப்பாரு ஓடாத
பெண் : கொத்தமல்லி
கோலமல்லி கொஞ்சி
பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த
மண்மேல

பெண் : பட்டுமல்லி
பாசமல்லி பல் இளிக்கும்
பருவமல்லி உன்ன வந்து
சேரப்போறேன் தன்னால

பெண் : கண்ண நீ வச்சா
கட்டிக்க கேப்பேன் கைய
நீ வெச்சா ஒட்டிக்கப் பாப்பேன்

குழு : தந்தானே னானே
தந்தானே னானே தந்தானே
னானே தானா னானே

பெண் : கண்ண நீ வச்சா
கட்டிக்க கேப்பேன் கைய
நீ வெச்சா ஒட்டிக்கப் பாப்பேன்

குழு : தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே

பெண் : நீ சாம்பிராணி
போட்டு வை சூடம் ஏத்தி
காட்டி வை சாயங்காலம்
வந்திருச்சி கேட்காம

பெண் : நீ நாட்டுக் கோழி
ஆக்கி வை நல்லி எலும்பு
கூட்டு வை போக வேணும்
ரெண்டு பேரும் காணாம

பெண் : தனி கம்பு வாங்கி
வை தங்கம் என்ன ஏங்க
வை நீயும் நானும் கூட
வேணும் நோகாம

பெண் : கொள்ளிக்கட்டை
ஏத்தி வை கூட நெய்யும்
ஊத்தி வை சூடுகிற சோற
வேணாம் சோறாம

பெண் : சாராய வாசம்
ஏ சாராய வாசம்

குழு : தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னா னே தந்தா னே

பெண் : ஏ சாராய வாசம்
சகவாசம் தோசம்
சாதகமான எண்ணாக
மோசம்

குழு : தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே

பெண் : நீ வேலு கம்ப
பாத்திருப்ப வெட்டுக்கத்தி
பாத்திருப்ப என்ன நீயும்
பாக்க வேணும் போராக

பெண் : நீ ஜாதகத்த
பாத்திருப்ப ஜோசியத்த
பாத்திருப்ப உன்னை நானும்
பாா்க்கவேணும் ஜோராக

பெண் : கால நேரம்
பாா்த்திருப்ப கையில்
காசு பாா்த்திருப்ப கன்னி
என்ன பாா்த்திடாம காயாத

பெண் : ஊர சுத்தி
பாத்திருப்ப உறவ
எண்ணிப் காத்திருப்ப
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம
சாகாத

பெண் : சந்தோசம் தானே
தீராத சொத்து சாதிக்கும்
போது வந்திடும் கெத்து

குழு : தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னா னே தந்தா னே

பெண் : சந்தோசம் தானே
தீராத சொத்து சாதிக்கும்
போது வந்திடும் கெத்து

குழு : தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே

பெண் : நான் ஆரவல்லி
சூரவல்லி ஆட வந்த
சாதிமல்லி
குழு : தந்தானானே
தானா னானே தானானே

பெண் : நான் வாசமல்லி
பூசமல்லி வாடிடாத
செண்டுமல்லி
குழு : தந்தானானே
தானா னானே தானானே

Thanks to YouTube: https://www.youtube.com/watch?v=2yDZZpygdiA&pbjreload=10

Read more...
counter