என்றென்றும் புன்னகை – விமர்சனம்

>> Saturday, December 28, 2013

தன்னோட அம்மா, அப்பாவை விட்டு பிரிஞ்சதில் இருந்து பொண்ணுங்க என்றாலே சிறு வயது முதல் ஹீரோ ஜீவாவுக்கு ஆகாது. காதல், கல்யாணம் எதிலும் அறவே நாட்டம் இல்லாம வளர்றார். அவர் கூடவே வளரும் நண்பர்கள் வினய் மற்றும் சந்தானம். இவர்கள் டி.வி. விளம்பரங்களை இயக்கும் கம்பனி ஒன்றை நடத்துகிறார்கள்.
ஜீவாவுக்கு நேரெதிரான குணத்துடன், எந்நேரமும் பெண்களை ஜொல்லுவிட்டுத் திரியும் வினய், கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பனாக சந்தானம். இந்த நட்புக்கூட்டணி “இனிமேல் கல்யாணமே பண்ணிக்கிறதில்லை” என சத்தியம் எடுக்கிறார்கள். திடீரென, ஜீவா தவிர்ந்த இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இதனால், நண்பர்களிடம் இருந்து விலகுகிறார் ஜீவா.

நண்பர்களை பிரிந்த ஜீவா - திருமணம் செய்து கொண்டாரா? பிரிந்த நண்பர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் கதை. இதனை, காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இவர்கள் விளம்பரம் செய்து கொடுக்க வேண்டிய கம்பனி ஒன்றின் முதலாளியின் பி.ஏ.வாக த்ரிஷா அறிமுகமாகின்றார். அம்மணி 15 வருஷத்துக்கு மேலா நடிக்கிறார். இப்படத்தில் செம கியூட் ! வெரி குட் பெர்பார்மான்ஸ்!. விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் பாதியளவை நடிப்பில் கொண்டு வருகிறார். அழகான ஓவியமாக கொட்டும் ஐஸ் மத்தியில் கூலாக நடக்கிறார். அவருக்கு குளிருதோ, இல்லையோ, பார்க்குற நமக்கு நடுங்குது. விளம்பர மாடலாக ஆன்ட்ரியா வருகிறார். சூடாக ஒரு ஆட்டம் போட்டு விட்டு போகிறார். நடிப்புக்கு ஏதுமில்லை.

நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் ஜீவா. கல்லாக இருப்பவருக்குள், காதல் துளிர்ப்பதை அழகாக நடித்திருக்கிறார். வினய், சாக்லெட் பாயாக வருகிறார்.

படத்தை தூக்கி நிறுத்துபவர் சந்தானம். அவரது, டைமிங் காமெடியும், உடல் மொழியும் தியேட்டர்களில் சிரிப்பு வெடிகள். ஆங்காங்கே, இரட்டை அர்த்தங்கள், ஆபாச செய்கைகள் என பிரமாதப்படுத்துகிறார். பின்பாதியில், காமெடிக்கு பஞ்சம் இருக்கக் கூடாது என்பதற்காக இடையிடையே சந்தானம்-மனைவிக்கு இடையிலான காமெடி பஞ்ச் கலகலப்பு. குடித்து விட்டு வீட்டு ஹாலில் போடும் ரகளை செம. 5 நிமிடம் நம்மை விடாமல் சிரிக்க வைத்தது.

பாராட்ட வேண்டிய இருவர் ஒளிப்பதிவாளர் மதி மற்றும் கலை இயக்குனர். ஹிந்திப் படங்கள் போல கலர்புள் ட்ரீட். இது தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஊட்டி, சென்னை, சுவிஸ் என காமெரா ட்ராவல் ஆகும் இடங்கள் எல்லாம் அருமை. ஜீவாவின் வீடு, ஆபீஷ் அமைப்பு பிரமாதம்.

காதல் கதைக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம். ஆறு பாடல்கள், ஹாரிஸ் சொதப்பிட்டார்.

நண்பர்களுக்கிடையேயான காமெடி நிகழ்வுகளை நூலாக வைத்து லவ், சென்டிமென்ட், ப்ரெண்ட்ஸிப், காமெடி என அழகான திரைக்கதையை கோர்த்திருக்கிறார் இயக்குனர். திருப்தியா ஒரு கலர்புள் படம். ரொம்ப சிம்பிளான கதை. அதைக் கொடுத்த விதம் அருமை.

0 comments:

counter