பிரியாணி சினிமா விமர்சனம்

>> Friday, December 27, 2013




கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிகள் இருவர் மாட்டிக்கொள்கிறார்கள். மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நி‌கழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது.

இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கார்(மாயா) அழகில் மயங்கி அவ‌ரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்.



விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது. அங்கு ஒரு கொலை நடந்திருப்பது. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான். இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.

இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார். இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன. அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார். என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை.

நாசர் கொலை எப்படி நடக்கிறது. உண்மையில் குற்றவாளி யார். கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க.

0 comments:

counter