கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 02
>> Monday, December 11, 2006
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
அதில் கலந்துக்கொள்ளப் போகின்றீர்களா, இது உங்களுக்கு தான்.
உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்? என்று சிந்தியுங்கள்.
நீங்க அமைச்சராக...... உங்களின் வாக்குறுதியில்...
நான் அமைச்சரானால்... சென்னைக்கும், செவ்வாய் கிரகணத்துக்கும் இடையில் பறக்கும் ரயில் விடுவேன்....
கூவம் ஆற்றின் இரண்டு பக்கமும் மல்லிகைத் தோட்டங்களை அமைத்து..... கம,கம சென்னை ஆக்குவேன்....
சென்னை மக்கள் பயணம் செய்ய குளு,குளு வசதியுள்ள பஸ் விடுவேன்.....
தமிழை செவ்வாய் கிரகணத்தின் ஆட்சி மொழி ஆக்குவேண்...
அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை மாணவர்களை, செவ்வாய் கிரகணத்துக்கு சுற்றுலா அழைத்து செல்வேன்......
குடும்ப அரசியலை நீக்குவேன்...
லஞ்சத்தையும், ஜாதியையும் ஒழித்துக்கட்டுவேன்...
என்று சும்மா புருடா விடாமல்...உங்களின் வாக்குறுதிகள் ஆக்கப்பூர்வமானதாவே இருக்கட்டும்....
**************
சரி சரி வைரமுத்துவின்... வைர வரிகளைப் பார்க்கலாம் வாங்க....
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வெண்டும் (3)
சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேற்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
பழமொழி கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு
(புத்தம் புது பூமி...)
யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் யேந்தி யேந்தி வந்து விழ வேண்டும்
போனவை அவை போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கொடுகள் அவை தேரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
(புத்தம் புது பூமி...)
**********
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.