திரைப்பட கதை விவாதத்திற்கு எப்படிப்பட்ட நபர்களை பயன்படுத்த வேண்டும்
>> Friday, December 19, 2025
புதிய சிந்தனை உள்ள குறும்படம் இயக்கிய இளைஞர்கள் ஓரிருவர் வைத்துக்கொள்வது அவசியம்
சுமார் பத்து திரைப்படங்களுக்கு மேல் இணை, துணை உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவமிக்க சிலர்
வெற்றியோ தோல்வியோ ஓரிரு படங்களை இயக்கிய இயக்குனர்கள் சிலர்,
( இவர்கள் எடுத்த படமும் பலரிடம் பணிபுரிந்த அனுபவமும் நமக்கு பாடமாக அமையும் )
வலை இதழ்களில், பத்திரிகைகளில் சிறுகதைகள்,கவிதைகள், நாவல்கள் எழுதிய அல்லது புத்தகங்கள் வெளியிட்ட ஒருவர்
மேற்கண்ட நபர்களில் கதை பேச வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாட்டு நடப்பு மிக நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.அதாவது செய்தித்தாள்களை தினசரி வாசிப்பவர்களாகவும், வலைதள பதிவுகளை படிப்பவர்களாகவும், யூட்யூபில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களாகவும் இருப்பது அவசியம்.
உதாரணமாக திரைப்படங்களைப் பற்றிய திறனாய்வு வீடியோக்கள் , திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் , வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் நேர்காணல்கள், திரைப்பட நடிகர்களின் நேர்காணல்கள்,வெளியூர் வெளிநாடு பயணக் குறிப்புகளை வெளியிடுபவர்களின் அனுபவங்கள் , அன்றாட அரசியல், உணவு & அரசியல் ,அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் ,சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள், விழிப்புணர்வு செய்திகள் ,கலை, இலக்கியம் ,ஆன்மீகம் என்று ஒன்றுக்கு ஒன்று முரணான வேறுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து அப்டேட்டில் இருப்பவராக இருக்க வேண்டும்
சிறுகதைகள் நாவல்கள் படிப்பவராக, படித்தவராக இருக்க வேண்டும்
மாதத்திற்கு குறைந்தது 15ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்ப்பவராக இருக்க வேண்டும்,
கதைக்கு ரிலேட்டிவாக சமீபத்தில் எடுக்கப்பட்ட அல்லது தான் பார்த்த படங்களை சுட்டிக் காட்டும் அறிவும் சொல்லும் காட்சியில் முதலில் தனக்கு ஒரு தெளிவும் உள்ள அனுபவசாலிகளாக இருப்பது அவசியம்
நெட் பிளிக்ஸ் ,அமேசான், ஹாட் ஸ்டார், ஜீ, ஆஹா போன்ற ஓடிடி தளங்களில் குறைந்தது இரண்டு தளங்களில் சப்ஸ்க்ரைப் செய்து வீட்டில் படம் பார்ப்பவராக இருப்பது அவசியம்,
கதை விவாதங்களில் பங்குபெறும் போது கதைக்கு தேவையான கேள்விகளை கேட்பதுடன் அதற்கான தீர்வுகளையும்,காட்சிகளையும் சொல்பவராக இருப்பது அவசியம்
கதை தேவைப்படும் இயக்குனரின் மனநிலை, அவரின் தேவை, அந்த கதையில் தேவை, அந்த கதை வெற்றி பெறுவதற்கான அவசிய கேள்விகள் மற்றும் பதிலாக காட்சிகள் ஆகியவற்றை பல்வேறு விதமான உதாரணங்களை கொண்டு சொல்பவராக இருப்பது அவசியம்,
குறிப்பாக யார் இயக்குனரோ அவரை மீறி அவரது தயாரிப்பாளரை அணுகாமல் படத்தின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு பேசுபவராக இருக்க வேண்டும்.
பேசும் கதையில் இருக்கும் கருவை திரைக்கதையை காட்சிகளை வேறு திரைப்படத்தின் கதை விவாதங்களுக்கு செல்லும் பொழுது சொல்லாதவராக இருப்பது அவசியம் ,
அதே சமயம் ஏற்கனவே அவர் வேலை பார்த்த கதைகளில் இருக்கின்ற நல்ல விஷயங்களை இந்த விவாதத்திலும் சொல்பவராகவும் இருக்கக் கூடாது,
குறிப்பாக நாம் சொன்ன காட்சி திரைக்கதையில் எழுதப்பட்டு படப்பிடிப்பு செய்யப்பட்டாலும் படம் வெளியாகும் வரை நான் சொன்ன காட்சி என்று தம்பட்டம் அடிக்காத மெச்சூரீட்டியும் தேவை,மேலும் ஒருவர் கதை பேசும் போது குறுக்கீடு செய்து பேசுபவராக இல்லாமலிருக்கும் அறிவும், பொறுமையும், பொறாமை இன்மையும் அவசியம் .
கதை பேச வந்த பிறகு எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த கதைக்கான கற்பனையை தோன்றுகிற காட்சிகளை ரகசியம் காக்காமல் வெளிப்படையாக சொல்பவராக இருப்பது அவசியம்.
ஒரு கதைக்கு பணியாற்றிய தொடங்கியதும் அந்தக் கதையை ஒத்த ஏராளமான திரைப்படங்களை பார்த்து அதில் கையாளப்பட்டிருக்கும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தும், அந்த கதைக்கேற்ற தரவுகளை இணையத்தில் பார்த்தும், புத்தகங்களைப் படித்தும் புதிய கதையின் காட்சிகளை திரைக்கதையை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திப்பவராக இருக்க வேண்டும்.