திரிஷ்யம் 2 ‍(மலையாளம்)

>> Thursday, June 10, 2021

திரிஷ்யம் 2 ‍(மலையாளம்)



திரிஷ்யம்:
தன் மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் மோகன்லால், போலீசிடம் இருந்து தப்பிப்பதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை.

திரிஷ்யம் 2 :
சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறார்கள். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.

போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே ஒரு நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர்.

ஜார்ஜ்குட்டியாக தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் மோகன்லால். முதல் பாகத்தில் நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து மனதில் நிற்கிறார். மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் மீனா, மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் நடித்து மனதில் நிற்கிறார்கள். அருமையான இயக்கத்தில், திரிஷ்யம் 2 திகைக்கவைகின்றது.

அமேசான் பிரைமில்(OTT) பார்த்து மகிழுங்கள்.

Read more...
counter