பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆல் பாஸ்
>> Wednesday, June 10, 2020

தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 15ந்தேதி தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளீயானது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்றும் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். நிலுலையில் உள்ள 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.. எஞ்சியுள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு மற்றூம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண்ணும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்ணும் வழங்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Read more...