கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...!!

>> Tuesday, July 16, 2013


ஒரு பஞ்சாபி, ஒரு மலையாளி, ஒரு ஆந்திராகாரு அப்புறம் நம்ம மிஸ்டர் X இவங்க நாலு பேரும் ஒரே கம்பெனில வேலை பாக்குறாங்க. நாலு பேரும் ஒண்ணா உக்காந்துதான் சாப்பிடுவாங்க. அதுல பாத்தா.............

பஞ்சாபி தினமும் சப்பாத்தி தான் லஞ்சுக்கு...............
மலையாளி தினமும் நேந்திரம் பழமும் புட்டும் தான் லஞ்சுக்கு...............
ஆந்திராகாரு தினமும் கொங்குரா ரைஸ் தான் லஞ்சுக்கு...............
நம்ம மிஸ்டர் Xக்கு எப்பவும் பருப்பு சாதம் தான் லஞ்சுக்கு.................

இது அவங்களுக்கு ரொம்ப வேதனையாப் போச்சு. என்னடா நாம தினமும் கஷ்டப்பட்டு வேலை பாக்குறோம். ஆனா தினுசு தினுசா கொடுக்காம தினமும் ஒரே மாதிரியே சாப்பாடு கொடுக்கறாங்களேன்னு ஒரே வருத்தம். ஒரு நாள் லஞ்ச் டைம்ல எல்லொரும் இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கும் போது இனி நாளைக்கும் இதே சாப்பாடு இருந்தா நாம சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

அடுத்த நாள் லஞ்ச் அவர்ல டிபன் பாக் ஸ் திறந்து பாத்தா திரும்பவும் எல்லாருக்கும் அதே சாப்பாடு. அதனால முன்னாடியே முடிவு பண்ணின மாதிரி காரணத்தை ஒரு லெட்டர்ல எழுதி வச்சுட்டு எல்லொரும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. அவங்க நாலு பேரும் ஒண்ணா சூசைட் பண்ணிக்கிடதுனால எல்லாரோட பாடியையும் ஒரே இடத்துல வச்சுருக்கு. அவங்க அவங்க மனைவி எல்லாம் அந்த லெட்டர படிச்சுட்டு ஒரே அழுகை. என்கிட்ட சொல்லி இருந்தா நான் வித விதமா சமைச்சுக் கொடுத்துருப்பேனே அப்படின்னு எல்லாம் அழுகை. ஆனா நம்ம மிஸ்டர் X மனைவி மட்டும் வெறிச்சுப் போய் உக்காந்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஒருத்தர் போய் அவர் மனைவிகிட்ட கேட்டாங்க.........

"ஏங்க இப்படி இருக்கிங்க? ஒரு குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்கேன்னு" கேட்டார்.

அதுக்கு மிஸ்டர் X மனைவி சொன்னாராம்...............
.
.
.
.
.
.
.
.
.
.
.
"இவர் எதுக்கு இந்த விஷயத்துக்காக சூசைட் பண்ணிக்கிட்டாருனு புரியல. ஏன்னா தினமும் சமைக்கிறதே அவருதானே".

Read more...
counter