கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 02

>> Monday, December 11, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

அதில் கலந்துக்கொள்ளப் போகின்றீர்களா, இது உங்களுக்கு தான்.

உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்? என்று சிந்தியுங்கள்.

நீங்க அமைச்சராக...... உங்களின் வாக்குறுதியில்...

நான் அமைச்சரானால்... சென்னைக்கும், செவ்வாய் கிரகணத்துக்கும் இடையில் பறக்கும் ரயில் விடுவேன்....

கூவம் ஆற்றின் இரண்டு பக்கமும் மல்லிகைத் தோட்டங்களை அமைத்து..... கம,கம சென்னை ஆக்குவேன்....

சென்னை மக்கள் பயணம் செய்ய குளு,குளு வசதியுள்ள பஸ் விடுவேன்.....

தமிழை செவ்வாய் கிரகணத்தின் ஆட்சி மொழி ஆக்குவேண்...

அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை மாணவர்களை, செவ்வாய் கிரகணத்துக்கு சுற்றுலா அழைத்து செல்வேன்......

குடும்ப அரசியலை நீக்குவேன்...

லஞ்சத்தையும், ஜாதியையும் ஒழித்துக்கட்டுவேன்...

என்று சும்மா புருடா விடாமல்...உங்களின் வாக்குறுதிகள் ஆக்கப்பூர்வமானதாவே இருக்கட்டும்....

**************

சரி சரி வைரமுத்துவின்... வைர வரிகளைப் பார்க்கலாம் வாங்க....

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வெண்டும் (3)

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேற்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

பழமொழி கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

(புத்தம் புது பூமி...)

யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் யேந்தி யேந்தி வந்து விழ வேண்டும்

போனவை அவை போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கொடுகள் அவை தேரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

(புத்தம் புது பூமி...)

**********

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 01

>> Friday, December 08, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

பொதுவாகவே இப்படி ஏதாவது கட்டுரைப்போட்டி என்றால்... நாமெல்லாம் என்ன செய்வோம்... நம்ம அண்ணன்மார்களிடமோ, அக்காக்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ, கெஞ்சி கூத்தாடி, அந்த தலைப்பில் எழுதி தரச்சொல்லி, அதை வாங்கி மனப்பாடம் செய்து எழுதுவோம்...

சிலர் காலேஜில் படிப்பவர்களிடம் இருக்கும் கட்டுரைகள் என்ற புத்தகங்களில் இருந்து முழுசாக உருகிக்கொள்ளுவார்கள்...

கொடுமை என்னவென்றால் சிலர் "பிட்" கூட அடிப்பார்கள், இன்னும் சிலரோ "ஈ" அடிச்சான் காப்பி அடிப்பார்கள்.....

ஆனால் வெகு சிலர் மட்டும் புத்தகங்கள், பத்திரிக்கைகளை படித்தும், தொலைக்காட்சியை பார்த்தும், வானொலியில் கேட்டும், புரபஷர்கள், ஆசிரியர்கள், நாலும் தெரிந்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள் இப்படி சிலரிடம் விவாதித்தோ... கிடைத்த சில பாயிண்டகளை வைத்துக்கொண்டு சொந்தமாக, சிந்தித்து எழுதி வெற்றி பெறுவார்கள்.....

அடுத்தவர்களின் கருத்துக்கள் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் அதை பின்பற்றாமல், தங்களின் சொந்த நடையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்...

************

நண்பர் லக்கி லுக்குடன் பேசிக்கொன்டிருக்கும் போது..... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றம்/அவை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாது குறித்து சில வித்தியாசமான கருத்தை சொன்னார்.... என்னை சிந்திக்க வைத்த சில கருத்துக்கள்....

1. வெறுமனே சட்ட சபைக்கு போய் பாக்கு மென்று விட்டு வந்தால் எந்த பிரயோசனமும் இல்லை.

2. ஒரு சிறந்த எம்.எல்.ஏ. மக்களோடு பழகி அவர்களது பிரச்சினைகளை அறிந்தால் மட்டுமே அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியும். இதற்காக சட்டமன்றத்துக்கு சென்று வாதம் புரிய தான் வேண்டும் என்பதில்லை.

3. நான் சட்டமன்றத்துக்கு போவது தவறென்றோ, போகாதது நல்லதென்றோ சொல்லவில்லை. சட்டமன்றத்துக்கு போகாதது பெரிய குற்றமெல்லாம் இல்லை என்றே சொல்லவருகிறேன்.

4. வாரத்துக்கு ஒரு முறை எம்.எல்.ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்கள் வாங்க வேண்டும். தொகுதியில் சிறு சிறு பிரச்சினைகளோ அல்லது ஏதேனும் பெரிய விபத்துக்களோ ஏற்பட்டால் ஸ்பாட்டுக்கு உடனே செல்ல வேண்டும். அதிகாரிகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். தன் தொகுதியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

5. சட்டசபைக்குப் போகவில்லையென்றால் கவனஈர்ப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்னை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கல், கேள்வி/பதில் --- இவற்றில் பங்கேற்பது/பதிலளிப்பது இல்லமல் போய்விடும். மேலும் பங்களிப்பு முற்றிலும் இருக்காது.

************

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...

வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

>> Tuesday, December 05, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலைப்பு: உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?

கட்டுரை A4 அளவிலான தாளில் 5 முதல் 8 பக்கங்கள் வரை இருக்கலாம்.

போட்டியில் பங்கேற்போர் ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், விலாசம், பிறந்த தேதி, ஆணா-பெண்ணா, படிக்கும்/படித்த துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மார்ச் 31, 2007

வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் தேதி : ஏப்ரல் 14, 2007 (தமிழ்ப் புத்தாண்டு)

பரிசுகள்:
முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: தலா ரூ2,000 (20 பேருக்கு)

அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
No. 67 - 5th Lane,
Chennai-600 039
தொலைபேசி இலக்கம்: 044-45561101

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...

கலாநிதி மாறனை வாழ்த்துகின்றேன்

>> Tuesday, November 28, 2006

எனது நண்பர் ஆனந்துடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது, எங்களின் அரட்டையிலிருந்து சில துளிகள்....

செய்தி : தற்போது வெளியாகியுள்ள Forbes இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 20 ம் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள்.

கலாநிதி சிறந்த பணக்காரராக வந்தது எனக்கு மிகப் பெருமைதான் ஆனால் அவரது துறைதான் சற்று இடிக்கிறது.

இதுவே அவர் மிட்டல் மாதிரி ஸ்டீல் துறையிலோ, அசீம் பிரேம்ஜீ மாதிரி சாப்ட்வேர் துறையிலோ, அம்பாணி மாதிரி பெட்ரோ கெமிகல் துறையிலோ வளர்ந்திருந்தால் எந்த கேள்வியும் எங்குமே வந்திருக்காது

மற்ற துறைக்கும் மீடியாவிற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற துறைக்கு மக்களின் சிந்தனைகளை, கருத்தை மாற்றும் சக்தி இல்லை, மீடியாவிற்கு அது உண்டு

அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவை கையில் வைத்திருக்கக்கூடாது என்ற தார்மீகம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புஷ் எந்த டி.வியையும் நடத்த வில்லை, டோனி ப்ளேர் எந்த பத்திரிக்கையையும் நடத்தவில்லை.

இந்த கட்சிக்காரர்கள் கையில் மீடியா என்ற தவறான முன் உதாரணம் நம் அண்டை மாநிலங்களில் கூட கிடையாது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பத்திரிக்கைத்துறை வர்ணிக்கப்படுகிறது. அரசியல் என்பது வேறொரு தூண். அரசியலை விமர்சிக்கவேண்டியதும், முறைபடுத்தவேண்டியதும்தான் பத்திரிக்கைகளின் கடமை. அதற்கு அவை அரசியலுக்கு அப்பாற்பட்டுத்தான் இருக்கவேண்டும். இந்த தார்மீகம் உலகில் உள்ள ஜனநாயக நாடெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளே ஜனநாயத்தின் நான்காவது தூணையும் கையில் எடுத்துக்கொண்டால் இதை இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே நான் பார்க்கிறேன். ஜனநாயத்தின் நான்காவது தூண் பலவீணப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கட்சி ஆதரவு பத்திரிக்கைகள் ஒரு சில இடங்களில் உண்டு, ஆனால் நேரடியாக கட்சிக்காரர்களே பத்திரிக்கை நடத்தும் கூத்து, அதுவும் முன்னனி வெகுஜன பத்திரிக்கையாக தொலைக்காட்சியாக இருக்கும் அவலம், உலகத்திலேயே நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு

இதில் சன் டீ.வி. மட்டும் அல்ல, ஜெயா டி.வியும் குற்றவாளிதான். ஆனால் இந்த கட்சி சார்ந்த மீடியா கலாசாரத்தை முதலில் புகுத்தியது சன் டீ.வி என்பதை யாரும் மறுக்க முடியாது.ஜெயா டி.வி, பின்பு சன் டீவிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான்.

சாப்ட்வேர் தொழில் தொடங்கினால், அதற்கு நுகர்வோரை பிடிக்க சிரமப்படவேண்டியிருக்கும். ஸ்டீல் தொழில் தொடங்கினால் அதற்கும் நுகர்வோரை பிடிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். இதுபோன்ற கஷ்டங்களை படாமல், திமுககாரர்களை முதலீடாக வைத்து அவர்களை நம்பி எளிதாக தொடங்கப்பட்டதுதானே சன் டீ.வி. அதன் பின் திமுகவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபட்டதும் சன் டீவியின் நோக்கத்தில் ஒன்றுதானே?

இதுபோன்ற கட்சியின் முதலீட்டில் வளர்ந்த ஒரு தொழிலதிபரையும், ஏழையாக பெட்ரோல் போடும் பாயாக இருந்து இந்தியாவின் முண்ணனி தொழிலதிபராக வளர்ந்த அம்பாணி போன்றவர்களையும் ஒப்பிடுவதே தவறு என்று நான் எண்ணுகிறேன்.

தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியிலும் செய்தி நடுநிலயாக இருக்காது என்ற எண்ணத்தையும். ஒரு செய்தி தெரியவேண்டுமென்றால் பல தொலைக்காட்சி செய்திகளை பார்த்துவிட்டு நாமே உண்மையை ஊகித்துக்கொள்ளவேண்டும் என்ற கேலிக்கூத்து கலாசாரத்தையும் தமிழகத்தில் கொடியேற்றி வைத்தது சன் டீ.விதானே? உலகத்தில் இதுபோன்று எங்காவது இருக்கும் என்று நம்புகிறீர்களா?

ஒரு கட்சிக்காரரின் கையில் மீடியா இருப்பது, அதுவும் சிறந்த மீடியா இருப்பது, ஒரு மாநிலத்தின் மக்களையே ஒரு கட்சியின் கீழ் கொண்டுவரும் முயற்சிதானே. இது சரியா? என்பதை மட்டும் சிந்தியுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவில் வளர்வது, மாநிலத்திற்கு ஆரோக்கியமானது என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? நான் நம்பவில்லை. அந்த கட்சி சார்பானவர்கள் வேண்டுமானால் இந்த அவலத்திற்கு வக்காளத்து வாங்கலாம். ஒரு சாதாரண தமிழ்நாட்டு குடிமகன் என்ற பார்வையில் இதை தமிழ்நாட்டின் அவலமாகவே நான் பார்க்கிறேன்.

மற்றபடி கலாநிதி மிகப்பெரும் செல்வந்தராக வந்தது எனக்கு மகிழ்ச்சியே.இதுவே அவரின் துறை வேறாக இருந்திருந்தால் இன்னும் பெருமைகொள்ளலாம்.

நான் மேற்கூறிய கருத்துக்களில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள் விட்டுவிடுங்கள்.

Read more...

வாழ்த்துவது எப்படி ....?

>> Friday, November 24, 2006

அன்பு நண்பர்களே என்று தொடங்கலாமா....
அன்பு தாய்மார்களே...அருமை பெரியோரேன்னு சாலமன் பாப்பையா ஆரம்பிக்கின்ற மாதிரி இருக்கும்.....

அன்பார்ந்த நண்பர்களே....
இதுவும் அன்பார்ந்த வாக்காள பெருமக்களேன்னு அரசியல்வாதிகள்...தேர்தலின் போது கூவுற மாதிரி இருக்கும்....

அடிக்க வராதீங்க...!!

சரி நண்பர்களே... இதுவே ஓக்கே...

எப்படி வாழ்த்தினா என்ன.... மனதார வாழ்த்தினாலே போதும்....

அப்பா... எப்படியோ... நாமளும் எப்படின்னு (?) ஒன்னு போட்டாச்சி..!!!!

Read more...

சும்மா சிரிக்கலாம் வாங்க...!!!

>> Wednesday, October 25, 2006

சும்மா கம்ப்யுட்டர் ஸ்கிரீனையே பாத்து வேளை செய்யறீங்களா...

பிரேக் எடுத்துட்டு இந்த ஜோக்க படிங்க....

இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பார்த்துக்கிட்டலும், ஒரே கேள்வியத்தான் கேட்பாங்க...

என்ன அது...

ஆமா, எந்த பிளாட்பார்ம்ல ஒர்க் பண்ற...

சிரிச்சீங்களா... உதைக்கணும்ன்னு என்ன தேடாதீங்க ஏன்னா.... நானும் உங்க ஜாதி தான்..

(காப்பி பண்ண ஜோக் தான்)

Read more...

செத்தான் கருணாகரன்: இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

>> Wednesday, October 11, 2006

இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

Read more...

A small truth to make our Life

>> Tuesday, October 03, 2006

இது என்னை மிகவும் கவர்ந்தது...

நீங்களும் படிச்சி இருக்கலாம்.... அதனால் என்ன... நல்லதை எத்தனை தடவை வேண்டுமென்றாலும் படிக்கலாமே.....

இங்கிலீஸ்ல இருக்குன்னு திட்டாதீங்க...!!!

A small truth to make our Life 100% successful..........

If
A=1
B=2
C=3
D=4
E=5
F=6
G=7
H=8
I=9
J=10
K=11
L=12
M=13
N=14
O=15
P=16
Q=17
R=18
S=19
T=20
U=21
V=22
W=23
X=24
Y=25
Z=26

Then

H+A+R+D+W+O+R+K =8+1+18+4+23+15+18+11 = 98%

K+N+O+W+L+E+D+G+E = 11+14+15+23+12+5+4+7+5 = 96%

L+O+V+E=12+15+22+5=54%

L+U+C+K = 12+21+3+11 = 47%

(None of them makes 100%)...............................

Then what makes 100%

Is it Money? ..... No!!!!!

Leadership? ...... NO!!!!

Every problem has a solution, only if we perhaps change our "ATTITUDE“.

It is OUR ATTITUDE towards Life and Workthat makes

OUR Life 100% Successful...

A+T+T+I+T+U+D+E = 1+20+20+9+20+21+4+5=100%

அப்புறமென்ன... சும்மா கலக்கலாம் மச்சி....!!!!

Read more...

என்ன எழுதுவது....?

>> Saturday, September 23, 2006

எனது நண்பர்களை பார்த்து நானும்.. பிளாக் ஆறம்பிச்சாச்சு....
என்ன எழுதுவது....?
நண்பர்களே ஐடியா குடுங்க......

அது ஒன்னுமில்லை, காப்பி அடிச்சே பழகிடுச்சி...
இனி சுயமா முயர்ச்சிக்கின்றேன்...

Read more...

SMS KRUMBHU Ha...Ha...Ha.....

>> Thursday, June 01, 2006

Earth may stop Rotating,Birds may stop Flying,Candles may stop Melting,Fishes may stop Swimming,Heart may stop Beating,But your Brain willnever start working!
--------------
I ve written nice poem 4 you.Twinkle Twinkle Little Star..you should Know What you R..& Once you Know What you R..Mental Hospital is not So Far..
---------------
Why are Egyptian's Children always confused??Coz after death, their DADDY becomes the MUMMY.
------------------
My friend, the best qualitythat I like about u is that,U R very sentimental ....10% Senti and 90% Mental..!
-----------------
Birds love you,monkeys love you,hippos love you,snakes love you,tortoise love you,giraffe loves you.....Please go back to ZOO,they all really miss you!
---------------
Sincere Apology: If u dont likeany of my SMS n dont like 2 read,then plz dont hesitate, feel freeto..... throw ur mobile!!
----------------
After engagement : SupermanAfter Marriage : GentlemanAfter 10 years : WatchmanAfter 20 years : Doberman
--------------
Sorry 4 disturbing u.can u fax me ur photo,its very urgent,serious matter hascomeup actually,we r playing cardsand I lost the joker
---------------
What happened 2 ur network?I tried 2 call u but the operatorsaid "Welcome 2 the jungle,the monkey u r trying to call ison the tree....Plz try later."
------------------
Scientists all over the worldr wondering how long a humanbeing can live without a brain...Kindly tell them ur age...
---------------
நான் வீணை,நீ இசை.நான் மேகம்,நீ மழை.நான் விளக்கு,நீ எண்ணெய்.ஒரு விளக்கெண்ணெயை நண்பனாகக் கொடுத்த, கடவுள் என் கையில் கிடைத்தால் ...
-------------------------
பெஞ்சா தான் மழைநின்னா தான் சிலை எஸ்.எம்.எஸ்.சுக்குநான் தான் தலை.....
-----------------
தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலிகப்பலுக்குள்ள தண்ணி போனா காலி
---------------
51 ரூபாய் கடன் வாங்கியவர், 15ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். ஏன்?பணத்தைத் திருப்பித்தந்தாராம்!!!
--------------------
ரத்த வங்கிக்குப் போனால் ரத்தம் வாங்கலாம்ஸ்டேட் வங்கிக்குப் போனால் ஸ்டேட் வாங்க முடியாது
-----------------------------------
ஏன்பா எப்ப பாரு படிலேயே நிக்கிறியே நீ என்ன வட்ச்மேனுக்கு பொரந்தையா? நீ கூடத்தான் எப்ப பாரு சில்லரை கேக்ர அப்ப நீ என்ன பிச்சகாரனுக்கு பொரந்தையா?
----------------------------
தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?
----------
பையன் கடவுளைப்பார்த்து வேண்டினான்'மாமா முருகா, காப்பாத்து!'ஏன் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?ஏனெனில், அந்த நேரம் பெண் ஒருத்தி,'அப்பனே முருகா, காப்பாத்து!'என்று வேண்டிக்கொண்டிருந்தாள்
------------

Read more...
counter